திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரும் வழக்கை வரும் 28-ஆம் தேதி விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன. இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த மூன்று தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முறையிட்டது.
தற்போது ஒப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் வழக்குகள் முடிவடைந்த நிலையில், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்தார். இந்த 3 தொகுதிகளும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
இந்நிலையில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரும் வழக்கை வரும் 28-ஆம் தேதி விசாரணை நடத்துவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…