பேரியம் பட்டாசுகளுக்கு தடை.. அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.! உச்சநீதிமன்றம்

Firecrackers

வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன.

மேலும் சில மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர வரம்புகளை நிர்ணயித்துள்ளன. இதற்கிடையில், பேரியம் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவு, காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி-என்சிஆர் பகுதிக்கு மட்டும் அல்ல, அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேரியம் உப்புகள் மற்றும் பிற மாசுபடுத்தும் இரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளின் தடையையும், பண்டிகை காலங்களில் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றுமாறு ராஜஸ்தான் அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2021ம் ஆண்டு பட்டாசுகளுக்கு முழுத் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

தொடர்ந்து, இந்த பட்டாசுகள் வெடிக்கும்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், அதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப்படுவார்கள் என்று தெரிவித்தது. அதோடு, இந்த உத்தரவு டெல்லி – என்சிஆர் பகுதிகளுக்கு மட்டும் அல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக, காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ராஜஸ்தான் மாநிலமும் இதைக் கவனத்தில் கொண்டு, திருவிழாக் காலங்களில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்