#Breaking : திரையரங்குகளில் இலவச குடிநீர்.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Default Image

திரையரங்கினுள் இலவச குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவு பொருட்களை திரையரங்கிற்குள் கொண்டு வரலாம் எனும் ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு விசாரணை செய்தது. விசாரணை முடிவில் நீதிமன்ற அமர்வு உத்தரவில், திரையரங்கு என்பது பொழுதுபோக்கு அம்சம் என்பதால் அதனை வியாபார நோக்கத்தோடு திரையரங்குகள் அணுகலாம். ‘

அதாவது, திரையரங்கினுள் என்னென்ன கொண்டு வர வேண்டும் என்பதை திரையரங்கு நிர்வாகமே முடிவு செய்யலாம். ஆனால், கட்டணமில்லா குடிநீர் வசதியை அமைக்க வேண்டும். அது போல குழந்தைகளுக்கு தேவையான உணவை திரையரங்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். என அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்