உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கடந்த சில நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு எந்த ஒரு கோப்பும் வரவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.