மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வர் .
அந்த கொலிஜியம் அமைப்பின் பரிந்துரையானது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய சட்டத்துறை அதில் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் பணி நியமனம் செய்யப்படும்.
சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.!
இந்த நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு அதிருப்தியை தெரிவித்துள்ளது. கொலீஜியம் சில பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. ஆனால அதில் ஒரு சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிலரை அங்கீகரிக்காமல் அப்படியே கிடப்பில் வைத்து விடுகிறார்கள். இது நீதித்துறை மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை குறைக்கும் வகையில் அமைந்துவிடும் என்றும்,
சில நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அதை கொலீஜியம் அனுமதிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கு (மத்திய அரசு) சம்மதமா.? உங்கள் முடிவின்படி, யாரோ ஒருவர் நீதிபதியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், நாங்கள் அதனை ஏற்கவில்லை.
ஏற்கனேவே, பஞ்சாப் , ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் 5 நீதிபதிகள் பெயரை பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு 3 நீதிபதிகள் பெயரை தான் அங்கீகரித்தார்கள் என ஒரு சில உதாரணங்களையும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கிறோம் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கூறினார். இதனை அடுத்து இந்த வழக்கானது நவம்பர் 20ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…