பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை! வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி !
ரஃபேல் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை உச்சநீதிமன்றம் திருடன் என்று கூறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.
இதற்கு பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. மீனாக்ஷி லேகி தொடர்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி தனது வருத்ததைப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து ராகுல் காந்தி அவர்கள் கூறுகையில், பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக, கூறினேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.