நேரடி விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் திடீர் அறிவிப்பு!
டெல்லி:உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாகவும்,மாறாக காணொலி மூலம் மட்டுமே வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி,இன்று முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.