கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்.? உச்சநீதிமன்றம் அதிருப்தி.!

Kerala Governor Arif ohammed Khan - Supreme Court of India

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் (பாஜக ஆளாத மாநிலங்கள்) ஆளுநருக்கும் , ஆளும் மாநில அரசுக்குமான நிர்வாக ரீதியிலான மோதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அந்தந்த குறிப்பிட்ட மாநிலங்கள் சார்பாக ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு நடைபெற்று வருகிறது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் , கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!

கேரள மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் , கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சட்டப்பேரவை மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவது குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வாதிட்டார்.

கேரளா ஆளுநர் அலுவலகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி வாதிடுகையில், கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எட்டு மசோதாக்களில், ஏழு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என விளக்கம் அளித்தார்.

எட்டு மசோதாக்கள் தொடர்பாக கேரள ஆளுநர் முடிவெடுத்துள்ளதாக ஆளுநர் தரப்பு கூறிய நிலையில், சட்ட மசோதாக்கள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் ஆலோசிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க அல்லது நிராகரிக்கஉரிய வழிகாட்டுதல்களை வெளியிடக் கோரிய கேரள மாநில அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்தது. மேலும், நாங்கள் சட்டத்தை வகுத்து, அரசியலமைப்பின் கீழ் எங்கள் கடமையைச் செய்ய இங்கே இருக்கிறோம் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்