நடிகை ஸ்ரீதேவி,இவர் இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மட்டும் எம்.ஜி.ஆர்.,சிவாஜி,ரஜினி,கமல்,விஜய்,அஜீத் என மூன்று தலைமுறை நாயகர்களுடனும் நடித்துள்ளார்.இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னாள் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
நடிகை பத்மஸ்ரீ ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜூமைரா எமிரட்ஸ் டவர் என்னும் ஸ்டார் ஹோட்டலில் அறை எண் 2201ல் தங்கியுள்ளார். மும்பையில் இருந்து துபாய் திரும்பிய கணவர் போனி கபூர், சனிக்கிழமை மாலை நடிகை ஸ்ரீதேவியுடன் வெளியே செல்ல திட்டமிட்டு இருந்தார்.
அதற்காக குளியல் அறைக்கு குளிக்க சென்ற நடிகை ஸ்ரீதேவி நீண்ட நேரம் வராத காரணத்தால், சந்தேகத்தின் பெயரில் குளியல் அறைக்கதவை உடைத்து திறந்தனர். அப்போது, குளியல் அறை தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் இறந்த பின் முதலில் மரடைப்பால் மரணமடைந்தார் என்று கூறப்பட்டது.
பின்னர் அந்நாட்டு அரசு செய்த உடற்கூறு ஆய்வு,நடத்திய தடயவியல் விசாரணையின் முடிவில் ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை, அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.
அதன் பின்பு இன்று கணவர் போனி கபூரிடம் துபாய் புலன் விசாரணைப் பிரிவினர் காலையில் 3 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் துபாய் போலீஸார் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை, அவரின் மரணம் குளியல்தொட்டியில் தவறி விழுந்ததால் ஏற்பட்டதுதான் எனத் தெரிவித்து வழக்கை முடித்துவிட்டனர். இன்று மாலை 6.30 மணிக்கு கிளம்பிய தனி விமானத்தில் அவரது உடல் மும்பை கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை அவரது உடல் மும்பையில் அடக்கம் செய்யப்படவுள்ளது
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…