சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
இதன் பின் பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் விளக்கம் ஒன்றை அளித்தார்.அவர் கூறுகையில், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செல்லவில்லை.சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கேள்வி எழுப்பினார் .சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தற்போது சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…