கோவிலில் குடுத்துவிட்டு நடனமாடிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.!
திருவிழாவில் மது குடித்துவிட்டு நடனமாடிய காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இடுக்கியில் நடந்த கோவில் திருவிழாவில் போதையில் இருந்த கேரள போலீஸ்காரர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அதிகாரி மீது காவல் துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த இடுக்கியில் உள்ள பூபாறை மாரியம்மன் கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.ஷாஜி என்பவர் அங்கு பணிக்காக சென்றார். இதனையடுத்து, குடித்துவிட்டு போதையில் அவர் நடனமாடிய நிலையில், பொதுமக்கள் சிலர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர் நடனமாடும் அந்த வீடியோ வைரலான நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் கே.பி.ஷாஜி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூணாறு டி.எஸ்.பி மற்றும் காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் அறிக்கையும் அளிக்கப்பட்டது.
And the department gifted a suspension to the Santhanpara Sub Inspector soon after this video from Idukki Pooppara got viral pic.twitter.com/kwblipMkxI
— chandrakanthviswanat (@chandra_newsKer) April 6, 2023