தேர்வு எழுதிய மாணவி, இறந்துபோன தந்தை – உருக்க வைக்கும் நிகழ்வு
- திருப்பூர், அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் 19 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
- இந்த விபத்தில் தந்தை இறந்தது தெரியாமல் மாணவி தேர்வு எழுதிய சம்பவம், மனதை உலுக்கியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற பேருந்து லாரி மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பேருந்தின் நடத்துனர் குடும்பம் குறித்த கண்களை கலங்க வைக்கும் தகவல் வெளியாகியது.
எர்ணாகுளம் அருகே உள்ளது வெளிய நாடு என்ற ஒரு கிராமம். அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பவித்ரா பைஜு. இவர் அங்கு உள்ள செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் தந்தை பைஜு. 47 வயதாகும் அவர் கேரள போக்குவரத்து கழகத்தில் பெங்களூர்-எர்ணாகுளம் வழியாக செல்லும் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அவரும் ஒருவர். அவளது மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள்.
அப்பொழுது பைஜு இறந்த விஷயம் அவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் பவிதா தேர்வு எழுதிக் கொண்டே இருந்ததால் அவளுக்கு தெரிவிக்கவில்லை. மாலை பள்ளி முடியவும் அவள் அவளது தோழியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவரது உறவினர் ஒருவர் அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் அவளுக்கு அவளது தந்தை இறந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட அவர் மிகுந்த அதிர்ச்சியாகி, அழுக தொடங்கிட்டாள் என ஊர் பஞ்சாயத்து தலைவர் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார். தந்தை இறந்தது தெரியாமல் மாணவி தேர்வு எழுதிய சம்பவம், கண்களில் கண்ணீரை வடியச் செய்தது.