வீட்டை விட்டு வெளியேற கடத்தி , கற்பழித்ததாக பொய் கூறிய மாணவி.! விசாரணையில் அம்பலம்.!
வீட்டை விட்டு வெளியேறுவதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கற்பழித்ததாக பொய் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிய ஹைதராபாத்தில் உள்ள மெச்சால் காடிகேசர் எனும் பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே பார்த்தோம்.
மூன்று நாட்கள் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் அதிர்ச்சிகரமான தகவலை கமிஷன் தெரிவித்துள்ளார்.அதாவது மாணவி கூறியது அனைத்தும் பொய் என்றும்,குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவள் வீட்டை விட்டு வெளியேற விரும்பியதாகவும்,அதனாலையே தான் தாயை அழைத்து தன்னை கடத்தியதாக கூறியதாகவும்,ஆனால் இதில் போலீஸ் ஈடுபட்டதன் மூலம் சற்று பயந்த மாணவி ஒரு கதையை உருவாக்கி போலீசாரிடம் கூறியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே மாணவி கூறிய விவரங்களின் படி கடத்தியதாக கூறப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் தான் ஆட்டோவில் ஏறி சென்றுள்ளதுடன் ,தன்னை தானே காயப்படுத்தி கொண்டதும் தெரிய வந்தது .மேலும் அவர் கூறிய தகவலில் முரண்பாடுகள் இருந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் மாணவியிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில் மாணவி பொய் கூறியதை ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளார்.மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மன்னிப்பு கோரி விடுவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.