மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மிகவும் வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பாஜக எம்பியை கைது செய்ய வேண்டும் என பாபா ராமதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளத் தலைவரும், உத்திர பிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அவரை கைது செய்ய வேண்டும் என் மல்யுத்த வீராங்கனைகள் பல வாரங்களாக டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை தொடர்ந்து சரண் சிங் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் கூறி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பாபா ராமதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார் . மேலும் அவர் கூறுகையில், நமது நாட்டின் மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் அமர்ந்து மல்யுத்த சம்மேளத் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கும் செயல் மிகவும் வெட்கக்கேடான விஷயம். அப்படிப்பட்டவரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அங்கு போராடுபவர்கள் நமது சகோதரிகள் மற்றும் மகள்கள், இது மிகவும் கண்டிக்கத்தக்க தீய செயல், பாவச்செயல் என பாபா ராமதேவ் கடுமையாக விமரிசித்து உள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…