சபரிமலை பாரம்பிரியத்தை பாதுகாக்க டெல்லியில் போராட்டம்…!!
கேரளாவில் உள்ள சர்பரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என உச்சநீதிமன்றம் உத்தவிட்டத்தையடுத்து கேரளாவில் பெரும் வன்முறை ஏற்பட்டது.இந்து அமைப்பு , rss போன்ற அமைப்புகள் திட்டமிட்டு கலவரம் செய்து வருகின்றன.
கேரளா அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்புடன் பெண்களை கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்தியது. கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் இதுவரை 51 பெண்கள் வழிபாடு நடத்தியதாக பெயர் பட்டியல் அளித்துள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோவிலின் பார்ப்பரியத்தை பாதுகாக்க கோரி டெல்லியில் அகில இந்திய சபரிமலை செயற்பாட்டாளர்கள் குழு சார்பில் நேற்று கேரளா அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்