பங்கு சந்தை எகிறிவிடும் …வாங்குறதா இருந்தா இப்போவே வாங்கிருங்க ! அட்வைஸ் கொடுக்கும் அமித் ஷா !
Amit Shah : இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து கொண்டு வரும் நிலையில், பங்குச் சந்தை உயரப்போகிறது என என்.டி.டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமித் ஷா கூறி இருக்கிறார்.
இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்துகொண்டே வரும் நிலையில்,இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த வாரம் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்துவிட்டது. மேலும் இன்றைய நாளிலும் பங்குச் சந்தையானது 1% வரை சரிந்துள்ளது. உலகளவில் பங்கு சந்தை பெரிதாக சரிவை காணாத போதும் இந்திய பங்கு சந்தையானது தொடர் சரிவை சந்தித்து கொண்டே வருகிறது.
நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இதே போல தான் பங்குச் சந்தையில் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் பலரும் கூறினார்கள். இதை தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்திய பங்குச் சந்தையானது உயரப்போகிறது என உள்துறை அமைச்சரான அமித்ஷா தற்போது தெரிவித்துள்ளார்.
இதை குறித்து உள்துறை அமைச்சரான அமித்ஷா என்.டி,டிவி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இதை பற்றி பேசி இருந்தார். இதை குறித்து அவர் பேசியபோது “இதற்கு முன்னதாகவும் இந்திய பங்குச் சந்தை அதிகளவில் இறங்கியுள்ளது. அதனால் இந்திய பங்குச் சந்தையின் சிறு நகர்வுகளை கூட நேரடியாக நாடுளுமன்ற தேர்தலுடன் இணைப்பது சரியானது அல்ல. இந்த சரிவானது சில வதந்திகளால் கூட பங்குச் சந்தை இறங்கியிருக்கலாம்.
மேலும், ஜூன் 4-ம் தேதிக்குள் அதாவது தேர்தல் முடிவகளுக்குள் பங்குகளை வாங்குவதாக இருந்தால் இப்போதே வாங்கிவிடுங்கள். அதன் பிறகு பங்குச் சந்தை எகிறப்போகிறது. ஒரு நிலையான அரசு இருந்தால் பங்குச் சந்தைகள் சிறப்பாக உயரும். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறார். இது தான் என் கணிப்பு, மேலும் நடைபெற்ற இந்த முதல் 3 கட்ட வாக்குப்பதிவில் கூட பா.ஜ.க 190 இடங்களுக்கு மேல் கைப்பற்றும்.
நான்காம் கட்ட தேர்தலும் எங்களுக்கு ஆதரவாக சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்று என்.டி.டிவிக்கு அளித்த அந்த பேட்டியில் பேசி இருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, மொத்தம் 181 பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.