‘சாத்தி’ செயலியை அறிமுகம் செய்த மத்திய அமைச்சர்.!
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ’சாத்தி’ என்ற செயலியை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்தார்.
சுற்றுலா அமைச்சகம் நேற்று உலக சுற்றுலா தினத்தை காணொளி கட்சி மூலம் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு உலக சுற்றுலா அமைப்பு ஊரக வளர்ச்சி ஆண்டாக அறிவித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சுற்றுலா திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையவுள்ளது.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில், ’சாத்தி’ என்ற செயலியை தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். சாத்தி என்பது இந்தியத் தர கவுன்சிலுடன் சுற்றுலா அமைசகத்தின் முன்முயற்சியாகும்.