இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட கூடிய ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவதே இல்லையாம், ஏன் என்று தெரியுமா? வாருங்கள் அறிவோம்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் உள்ள துமாரியாதி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பிகாம்புர் ஜகத் புர்வா. இந்த கிராமத்தில் கடந்த 75 வருடங்களாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவது இல்லையாம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும், அதிகப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த ரக்ஷா பந்தன் கடந்த 75 வருடங்களாக இந்த கிராமத்திலும் இதைச் சுற்றியுள்ள மற்ற சிறு சிறு கிராமங்களிலும் கொண்டாடபடாமல் இருக்கிறதாம்.
ஏன் ரக்ஷா பந்தன் என்னும் பெயரை உச்சரிப்பது கூட அங்குள்ள மக்கள் விரும்புவதில்லையாம். சிறியவர் முதல் பெரியவர்கள் வரையிலும் இந்த விழாவைக் கொண்டாடக் கூடாது என்ற ஒரு நம்பிக்கைதான் ஊறிக் கிடக்கிறது. ஏன் தெரியுமா? இதுகுறித்து அங்குள்ள சூரியநாராயணன் மிஸ்ரா எனும் பெரியவர் கூறும்பொழுது, கடந்த 1955 ஆம் வருடத்தில் ரக்ஷா பந்தன் தினத்தன்று எங்கள் குடும்பத்திலுள்ள இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். அதிலிருந்து அன்றைய தினத்தில் இந்த ரக்ஷா பந்தன் விழாவில் ராக்கி கட்டி கொள்வது நல்லதல்ல என்று இங்குள்ள இளம் பெண்கள் அஞ்சுகிறார்கள்.
இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மட்டும் சில பெண்களின் வற்புறுத்தலால் இணங்கி இந்த ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது அப்பொழுது ராக்கி கட்டி கொண்டு ஒருவரில் ஒருவர் அதே தினத்தன்று விரும்பத்தகாத சம்பவத்திற்கு உள்ளானார். அதிலிருந்து யாருமே இங்கு ராக்கி கட்டி கொள்ளவோ அல்லது அந்த பண்டிகை பெயரை உச்சரிப்பதற்க்கோ விரும்புவதில்லை என அவர் கூறியுள்ளார். இதுதான் அந்த இடத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…