கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்.! கேரளாவில் சோதனை அதிகரிப்பு.! தமிழகத்தில்… முன்னெச்சரிக்கை தீவிரம்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன.
கொரோனா தாக்கம் தற்போது சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.
இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கர்நாடக அரசு, உணவகங்கள், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசத்தை அணிய கட்டாய படுத்தியுள்ளது. அதே போல, கேரள அரசு கோவிட் 19 பரிசோதனைகளை அதிகரிக்கவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே போல், உ.பி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.