கர்நாடகாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குள் மற்றும் மல்டிபிளக்ஸ்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது நிகழ்ச்சி நடைபெறும் ஆடிட்டோரியம் போன்ற இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதுபோன்று, வரும் 26 முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க முடிவு செய்து உள்ளதாகவும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்குப் பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு கூடுதல் தளர்வுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் இன்று மட்டும் 24 மணி நேரத்தில் 1,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் அம்மாநிலத்தில் கொரோனாவால் 28,83,947 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 36,157 ஆகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,18,476 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…