ஏழுமலையான் கோவிலுக்கு தேனியைச் சேர்ந்த தொழிலதிபரின் சிறப்பு காணிக்கை ..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தேனியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தொழிலதிபர் தங்கதுரை என்பவர் ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் 6 கிலோ எடையில் தங்கத்தால் தயார் செய்யப்பட்ட 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான வாளை கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.
தேவஸ்தான துணை செயல் ஆலுவலர் ஹரிந்திரநாத் இந்த தங்க வாளை பெற்றுக் கொண்டார். முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அருகே தங்க வாள் வைத்து அலங்கரிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.