சபாநாயகர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்
கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.
கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அதாவது சபாநாயகர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.