கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை..!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு அதிகளவு பலன் தரக்கூடிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் தெற்கு பகுதியில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை வருகின்ற செம்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், கேரளாவில் உள்ள தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயன் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள பருவ மழை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்த தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அது போல வட இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வழக்கமான அளவு தென்மேற்கு பருவமழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.