கொரோனா அச்சம் காரணமாக தெலுங்கானாவில் தன்னை பெற்ற தாயை வீட்டிற்குள் அனுமதிப்பதற்கு மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் உள்ள கிஷான் நகரை சேர்ந்தவர், ஷியாமளா. 65 வயதாகும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிராவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.
கொரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சொந்த ஊருக்கு திரும்பமுடியவில்லை. தற்பொழுது இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம் கரீம் நகரை வந்தடைந்த ஷியாமளா, தனது வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த அவரின் மகன்கள் ஷியாமளாவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர். மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அவளுக்கும் கொரோனா தொற்று இருக்குமெனவும், இதன்காரனாகாம அவரை வீட்டிற்குள் அவரின் மகள்கள் அனுமதிக்க மறுத்தனர். எங்கு செல்ல என தெரியாத அவர், தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். இதனை கண்ட அங்குள்ள மக்கள், அவருக்கும் குடிநீர் மற்றும் உணவு வழங்கி உதவி வழங்குகின்றனர்.
மேலும், அவரின் மகன்கள் செய்த இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…