#viral: விதிமுறையை மீறியதால் பெற்ற தாயின் மீது நடவடிக்கை எடுத்த மகன் – குவியும் பாராட்டு!
பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஷீத் சேக். இவர் புதாத்தி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அப்போது அகமதுநகர் சோதனையில் இருந்த ரஷீத் சேக் தனது வீட்டின் அருகே தள்ளுவண்டியில் தாயார் காய்கறி விற்பதை பார்த்துள்ளார்.
உடனே காய்கறிகளை தாயிடமிருந்து பறிமுதல் செய்து நகராட்சி வண்டியில் எடுத்து சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரஷீத் சேக் செய்தியாளர்களிடம், தாயார் கொரோனா காலத்தில் விதிமுறையை மீறி காய்கறி விற்றதால் என் கடமையை நிறைவேற்றினேன் என்று கூறியுள்ளார். இதனால் இவருக்கு தற்போது பாராட்டு குவிந்து வருகிறது.