தந்தை திட்டியதால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த 17 வயது மகன்!

Default Image

தந்தை திட்டியதால் ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்து, தாயின் உதவியுடன் எரித்த 17 வயது மகன்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வரக்கூடிய மனோஜ் மிஸ்ரா என்பவர் அவரது மகனை கடந்த மே மாதம் ஏதோ ஒரு தவறுக்காக அதட்டியுள்ளார். இந்நிலையில் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய மாணவனான 17 வயது சிறுவன் அவரது தந்தை மீதிருந்த ஆர்வத்தால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவரது தந்தையை இரும்பு கம்பியால் தலையில் அடித்து அவர் மயக்கம் அடைந்ததும் துண்டுத் துணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் தாயின் உதவியுடன் தனது ஸ்கூட்டியில் அவரது தந்தையின் சடலத்தை வைத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டிற்குள் எடுத்து சென்று பெட்ரோல் மற்றும் டாய்லெட் கிளீனர் ஊற்றி எரித்துள்ளார். இந்நிலையில் காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதை அறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேலாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
மனோஜ் மிஸ்ரா நன்கொடை சேகரிப்பாளர் ஆக இருந்ததால் அவருடன் பணியாற்றியவர்கள் அவரை காணவில்லை என புகார் அளிக்குமாறு குடும்பத்தினரை வற்புறுத்தியுள்ளனர். வற்புறுத்தலின் அடிப்படையில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மனோஜ் மிஸ்ரா மகன் காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணைக்கு அழைத்தும், அடிக்கடி தவிர்த்து வந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மொபைல் நம்பரை சோதித்த பொழுது கிரைம் பேட்ரோல் சீரியலை அடிக்கடி தனது செல்லில் பார்த்து எவ்வாறு அடையாளம் தெரியாமல் பணத்தை அளிப்பது குறித்த வீடியோவை பார்த்து உள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் அச்சிறுவனையும் அவரது தாயார் சங்கீதாவையும் போலீசார் கைது செய்து கொலை செய்து ஆதாரங்களை அளித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு 11 வயது மகள் இருப்பதால் அச்சிறுமியை அவரது தாத்தா பாட்டியிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்