144 ஐ மதிக்காத தந்தையை போட்டு கொடுத்த மகன்!
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவையும் அது விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஓரளவு இதன் பாதிப்பில்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போது இந்தியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், வருகின்ற 14 ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சில பொறுப்பற்ற குடிமகன்கள் இந்த 144 தடை உத்தரவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.
அதுபோல தற்போது டெல்லியில் வசந்த்கஞ்ச் வசிக்கும் பகுதியில் வசித்து வரக்கூடிய 30 வயது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதாவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பின்பும் தனது தந்தை வீட்டை விட்டு அடிக்கடி வெளியே சுற்றி வருவதாகவும் அரசு உத்தரவுகள் முறையாகப் பின்பற்ற வில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் அவரது தந்தை மீது எப்.ஐ.ஆர் செய்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். தந்தையை மகனே சொல்லி கொடுத்தது ஆச்சரியமாக இருந்தாலும் இது ஒரு விதத்தில் நல்ல குடிமகனுக்கு அழகு தான்.