கொரோனா அச்சத்தால் தந்தையின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்!

Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தந்தையின் உடலுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால், நண்பர் உதவியுடன் சைக்கிள் எடுத்து சென்று மகன் அடக்கம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி அருகே உள்ள எம் கே யு பள்ளி எனும் இடத்தைச் சேர்ந்த சாதெப்பா சளகர் என்பவருக்கு 71 வயதாகிறது. கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிராம சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டு, இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், கொண்டு செல்வதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது சடலத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கேட்டதற்கு, கொரோனா அச்சத்தால் அவர் வர மறுத்துள்ளார்.
அதேசமயம் உறவினர்களும் உடலைப் பார்க்க கூட வரவில்லையாம், அங்கு பருவமழை வேற பெய்து வந்ததால், உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உடலை விரைவில் அடக்கம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. எனவே வருத்தமடைந்த அவரின் மகன் தன் தந்தையின் உடலை பாலிதீன் பையில் மூடி சைக்கிளில் வைத்து இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள சுடுகாட்டுக்கு தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். இருவரும் பாதுகாப்பு கவசம் அணிந்த சுடுகாட்டுக்கு கொண்டு சென்று உடலை அடக்கம் செய்துள்ளனர்.
உடலை சைக்கிளில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அதிவிட்டுள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் அவர்கள், முதல்வர் எடியூரப்பா அவர்களே உங்கள் அரசு எங்கே? உடலை கொண்டு செல்ல ஏன் ஆம்புலன்ஸ் கூட வரவில்லையா? உங்கள் அரசுக்கு துளியும் மனித நேயம் இல்லை. கொரோனா நோயாளிகளை கையாள்வதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்