கரடு முரடான பாதையில் 40கி.மீ தூரம் வரை காயமடைந்த பெண்ணை தூக்கி சென்ற வீரர்கள்.!

காயமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை காவல்படை வீரர்கள் தூக்கி சென்றுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கால்களில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். அதனையறிந்த இந்திய-திபெத் எல்லை காவல்படை வீரர்கள் அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்றுள்ளனர்.
அவர் நடந்து செல்லும் வழிகள் காட்டாற்று வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கரடு முரடாக இருக்கும். அந்த வழிகளில் சுமார் 15 மணி நேரம் அப்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் தூக்கி நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025