Sniffer Dog Leads Police [file image]
ஆந்திர பிரதேசம் : 8 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை போலீசாரின் மோப்ப நாய் அதிரடியாக கண்டுபிடித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நந்தியால் மாவட்டத்தில் இருக்கும் பகிடியாலா மண்டலத்தில் உள்ள முச்சுமரி கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 8 வயது சிறுமி தனது வீட்டிலிருந்து நண்பர்களுடன் உள்ளூர் பூங்காவிற்கு விளையாட சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், உடனடியாக சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் பல இடங்களில் சோதனை நடத்தி வந்துள்ளனர். மேலும், இந்த தேடுதல் பணியில் உதவுவதற்கு ஒரு மோப்ப நாயை பயன்படுத்தியுள்ளனர். இதில் ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் அரங்கேறி உள்ளது. அந்த மோப்ப நாய் போலீசார்களை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டையும் கண்டறிந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் குற்றவாளிகளாக போலீசார் கைது செய்து முதற்கட்டமாக விசாரித்துள்ளனர். அதில் அந்த குற்றவாளிகள் தாங்கள் தான் குற்றம் செய்தோம் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுவது என்னவென்றால், “அந்த 3 சிறுவர்ககளும் தான் கோலை செய்துள்ளனர் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அந்த சிறுமியுடன் ஒன்றாக விளையாடலாம் என ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமையை முச்சுமரி பாசனத் திட்டத்தின் கீழ் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று, அந்த சிறுமியின் வாயை மூடிக்கொண்டு மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
பின், நடந்த சம்பவத்தை மறைப்பதற்காக சிறுமியை கொன்று, பாசன கால்வாயில் உடலை வீசியுள்ளனர்”, என்று தெரிவித்துள்ளனர். மேலும், கால்வாயில் நீர்மட்டம் ஆழமாக உள்ளதாலும், பருவ மழை காரணமாக அந்த சிறுமியின் உடல் வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாலும், சிறுமியின் உடலை போலீசார் இதுவரை மீட்கவில்லை. இதனால், சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…