செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமரின் பிறந்த நாள் அன்று அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மீண்டும் குறைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
அன்று ஒரு நாள் மட்டும் தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்பட்டு விட்டு, மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சோர்வடைந்து உள்ளதை சுட்டிக் காட்டி ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நிகழ்ச்சி முடிந்து விட்டது என பதிவிட்டு, கடந்த 10 நாட்களில் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த வரைபடம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் செப்டம்பர் 16 வரை தடுப்பூசி போடும் பணிகள் குறைவாக இருந்ததும், செப்டம்பர் 17-இல் உச்சம் தொட்ட தடுப்பூசி செலுத்தும் பணி, மீண்டும் செப்டம்பர் 18 -இல் குறைந்துள்ளது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…