போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திவர் பாஜகவில் இணைந்தார்..?

Default Image

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை எதிர்ப்புச் சட்ட எதிர்ப்புத் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜ்ஜார் கடந்த பிப்ரவரி 1- ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்த ஷாஹீன் பாக் பகுதிக்கு சென்று வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர், பொலிஸ் நடத்திய விசாரணையின் போது, குர்ஜார் , அவரது தந்தை கஜே சிங்கும் 2019 முதல் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்றாற்போல குர்ஜார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான சஞ்சய் சிங் மற்றும் ஆதிஷி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி மற்றும் குர்ஜரின் குடும்பத்தினர் இருவரும் இதை மறுத்தனர்.  குஜ்ஜரின் தந்தை 2012 ல் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஆனால், ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சியுடன் இல்லை என்று அந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரம் காத்திருந்ததால் கோபமடைந்த குர்ஜார், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறினார். துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, கபில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்களை எழுப்பினார். அதே நேரத்தில் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு போராட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்