உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2 வது உயரமான சிவன் சிலை…!

Default Image
  • கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற முருதேஸ்வரா கோவில் அருகே உள்ள சிவன் சிலையானது,உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2 வது உயரமான சிவன் சிலையாக உள்ளது.
கர்நாடக மாநிலம்,உத்தரகன்னடா  மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் முருதேஸ்வரா கோவில் உள்ளது.இதன் சிறப்பு என்னவென்றால், இந்த கோவிலின் 3 பகுதிகளையும் அரபிக்கடல் சூழ்ந்துள்ளது.
இந்த கோவிலானது சிவபெருமானுக்காக கட்டப்பட்டது.இதில், 20 அடுக்குகள் கொண்ட அதாவது,249 அடி உயர ராஜகோபுரம் உள்ளது.இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது.
இந்த கோவிலானது ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மேலும்,இந்த கோயிலில் உள்ள லிங்கம்,உண்மையான ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதியாக நம்பப்படுகிறது. இந்த லிங்கமானது தரைமட்டத்தில் இருந்து கீழே 2 அடி ஆழத்தில் அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல்,இந்த கோவிலின் அருகே 123 அடி உயரத்தில் ஒரு பிரமாண்டமான சிவன் சிலை உள்ளது.இந்த சிலையானது,உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.
இதன்காரணமாக,இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள்,ஆன்மிகவாதிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.இக்கோவிலில்,காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும்.ஆனால்,தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்