மரியாதையை காப்பாத்திக்கோங்க…மோடிஜி! வெடித்த சிவசேனா..போர்க்கொடி

Default Image

கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்ற கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவில்களை திறக்கக்கோரி பாஜக போராட்டம் நடத்தி வந்தது.

இந்நிலையில் கோவில்களை திறக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கடந்த திங்களன்று கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அக்கடித்தத்தில் மராட்டியத்தில் பார்கள், ஓட்டல்கள், கடற்கரைகள் எல்லாம் திறக்கப்பட்டு உள்ள நிலையில் கோவில்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, நீங்கள் (முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே) திடீரென மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா? என்று குறிப்பிட்டு விமர்சித்து இருந்தார்.

ஆளுநரின் கடிதத்திற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமர் மோடிக்கு இது குறித்து உடனடியாக கடிதம் எழுதி இருந்தார். முதலமைச்சர் கவர்னர் எழுதிய கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது  இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார்.

இவ்வாறு ஆளுநர்க்கும் -ஆளும் சிவசேனாவுக்கு இடையே வெளிபடையாக கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில் மகாராஷ்டிரா ஆளுநரை திரும்பபெறக்கோரி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்து உள்ளது.

சிவசேனா இது குறித்து அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:
கவர்னர் மாளிகையின் கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்து எழுதப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் கோவில்கள் திறப்பை பெரிதுபடுத்தி வருவதாக பாஜகவை  சிவசேனா கண்டித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்