கக்கபோரா பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கக்கபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிசண்டை நடைபெற்றது. இதில், மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
இந்த சமப்வத்தின் போது இஷ்ரத் ஜான் (25), குலாம் நபி தார் (42) ஆகிய இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயங்கரவாதிகளிடமிருந்து வெடிமருந்து குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் நேற்று பாஜக தலைவர் அன்வர் கானை கொல்ல முயற்சி செய்தவர்கள் என கூறப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் அன்வர் கானை கொல்ல நேற்று பயங்கரவாதிகள் அவரின் வீட்டில் நுழைய முயன்றனர். அப்போது, வீட்டின் வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி பயங்கரவாதிகளை தடுத்தபோது, அவரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த காவலாளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காவலாளி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…