இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடிவடையவில்லை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடியவில்லை எனவே நாங்கள் ஓய்வெடுக்க முடியாது என மத்திய சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஒன்றரை வருட காலங்களாக அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் பாதிப்புகள் குறைவதும் அதிகரிப்பதும் வழக்கமாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை உருவாகி அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் ஒகொரோனா இரண்டாம் அலை தணிந்துள்ளதால் தற்பொழுது இரண்டாம் அலை முடிவடைந்து விட்டது என பலரும் நம்பி வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்கள் இன்னும் கொரோனா இரண்டாம் அலை குறையவில்லை என கூறியுள்ளார்.
மேலும் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து விட்டது உண்மைதான். ஆனால், ஒன்றரை வருடகாலமாக இருந்த கொரோனா பாதிப்பின் அனுபவங்கள் எங்களை எந்த சூழ்நிலையிலும் ஓய்வு எடுக்க கூடாது என கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலமும் முறையாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் நாம் கொரோனாவிலிருந்து வெற்றி பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.