மேகாலயா சுரங்கத்திற்குள் இரண்டாவது உடல் கண்டுபிடிப்பு…!!
மேகாலயா சுரங்கத்திற்குள் இரண்டாவதாக ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில் உள்ளது லும்தாரி கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த மாதம் 13–ந்தேதி திடீரென வெள்ளம் வந்து சுரங்கத்துக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சுரங்கத்திற்குள் பணியாற்றிக்கொண்டு இருந்த 15 தொழிலாளர்களும் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட வீரர்கள் கடந்த மாதத்துக்கும் மேலாக முயற்சி செய்து வந்தனர்.இந்நிலையில் 40 நாட்களுக்கு பின் அமிர் உசேன் என்ற தொழிலாளியின் உடல் கடந்த 24–ந்தேதி மீட்கப்பட்டது. அழுகிய நிலையில் கிடைத்த அவரின் உடல் நேற்று அவரது குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அமீர் உசேன் உடலை தொடர்ந்து மீண்டும் இரண்டாவதாக ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மீட்புப்பணி வீரர்கள் இரண்டாவது உடலை தரைக்கு மேலே கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தொழிலாளிகளின் உடலை தேடி வருகின்றனர்.