மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது.! ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.!

Default Image

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பகிர்ந்து, மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று கூறியுள்ளார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் 38,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 95%க்கு மேல் மதிப்பெண்களும், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 90% மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஐஏஸ் அதிகாரி ஒருவர் தனது சிபிஎஸ்இ 12 வகுப்பில் வேதியியல் பாடத்திற்கு அவர் எடுத்த மதிப்பெண்ணை சுட்டி காட்டி, மதிப்பெண்கள் எப்போதும் நமது வாழ்க்கையை தீர்மானிக்காது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நிதின் சங்வான், 2002-ல் வேதியியல் பாடத்திற்கு 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார், ஆனாலும் கடினமான தேர்வான சிவில் தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் .2015-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற நிதின் ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்து தற்போது குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஸ்மார்ட் சிட்டியின் துணை நகராட்சி ஆணையர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது 12-ஆம் வகுப்பு தேர்வில், வேதியியல் பாடத்திற்கு 24 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. ஆனால், என் வாழ்க்கையை அந்த மதிப்பெண்கள் தீர்மானிக்கவில்லை. எனவே மதிப்பெண்கள் அதிகம் எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் மீது சுமையேற்ற வேண்டாம். போர்டு முடிவுகளை விட வாழ்க்கை அதிகம். முடிவுகள் அடுத்தக்கட்டத்திற்கான வாய்ப்பே ஒழிய, விமர்சனம் செய்வதற்கு அல்ல என்று கூறியுள்ளார். தற்போது இவரது இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்