விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19… இடைத்தேர்தலுக்கான முழு அட்டவணை இதோ!
Lok Sabha Elections இந்த ஆண்டு (2024) மக்களவை தேர்தல் எப்போது தொடங்கும் எப்போது வாக்கு எண்ணிக்கை என்பதற்கான மொத்த விவரத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
read more- Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.!
இந்நிலையில், இடைத்தேர்தல் எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்டங்களில் நடைபெறும் என்பதற்கான விவரம் வெளியாகி இருக்கிறது. இதோ..
முதற்கட்டம் (ஏப்ரல் 19)
- முதற்கட்டமாக திரிபுரா ராம்நகரிலும், தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கும் நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டம் ( ஏப்ரல் 26)
- மகாராஷ்டிரா அகோலா மேற்கு மற்றும் ராஜஸ்தானின் பாகிடோராவில் நடைபெறுகிறது.
மூன்றாம் கட்டம் (மே 7)
- குஜராத்தின் விஜாப்பூர், காம்பத், வகோடியா, மானவதர், போர்பந்தர் ஆகிய தொகுதிகளிலும், மேற்கு வங்காளம் பகவங் கோலாவிழும், கர்நாடகாவில் ஷோரப்பூராவில் நடைபெறுகிறது.
நான்காம் கட்டம் (மே 13)
- உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தாத்ரால் மற்றும் தெலுங்கானா செகந்திராபாத் கான்ட் தொகுதியில் நடைபெறுகிறது.
ஐந்தாம் கட்டம் (மே 20)
Elections2024 : தேர்தல் அட்டவணை அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!
- ஜார்கண்ட்டின் காண்டே மற்றும் உத்தரப்பிரதேசம் லக்னோ கிழக்கில் நடைபெறுகிறது.
ஆறாம் கட்டம் (மே 26)
- ஹரியானாவின் கர்னால் மற்றும் உத்தரப்பிரதேசம் கெய்ன்சாரியிலும் நடைபெறுகிறது.
ஏழாம் கட்டம் (ஜூன் 1)
- பீகார் மாநிலத்தின் அகியோன் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் துத்தி, மேற்கு வங்காளத்தின் பாராநகர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலா, லாஹவுல் & ஸ்பிதி,சுஜன்பூர், பார்சார், காக்ரெட், குட்லெஹர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.