செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் உள்ளது..! பிரதமர் மோடி சிறப்புரை..!

PM Modi at Parliment

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வருகிறது. அதன்படி, புதிய நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு வி.டி.சாவர்க்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பின் நாடாளுமன்ற அவைக்குள் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஒன்றாக நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். அடுத்ததாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடி தனது முதல் சிறப்புரையை ஆற்றினார். அவற்றை கீழே காணலாம்.

  • ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது. அத்தகைய நாள் மே 28 ஆம் தேதி ஆகும். தற்பொழுது, புதிய பாதையில் புதிய பயணத்தை நாம் தற்போது தொடங்கியுள்ளோம்.
  • இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. எனவே, இந்த புதிய நாடாளுமன்றமும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்களித்து உலகின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
  • புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் எங்கு அமர்வார்கள். எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் காலத்தின் தேவையாக உள்ளது.
  •  

    செங்கோல் ஆனது சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது எங்கள் அதிர்ஷ்டம்.

  • செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம் ‘செங்கோல் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்