இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடியவர் கைது!

இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடியவர் கைது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிச்சிக்கழிபகுதியில், அரசு அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சிலர் காட்டு விலங்கு ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சாப்பிடுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் அன்றிரவே குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி அவர்களை பிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் சோதனையில் இறங்கியபோது அன்றிரவே சுமார் 25 கிலோ மதிப்பிலான இறைச்சியை மீட்டு இருந்தோம். ஆனால் அப்போது அங்கிருந்து குற்றவாளிகள் தப்பி விட்டனர். இருப்பினும் அவர்கள் வேட்டையாடிய காட்டு விலங்கின் இறைச்சியை மட்டும் மீட்டுவிட்டோம்.
முதலில் அந்த இறைச்சி மான் இறைச்சி என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஞாயிறு அன்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சுரேஷ் பாபு என்பவரை கைது செய்த பிறகுதான் இது காட்டெருமையின் இறைச்சி என கண்டறிந்தோம்.
பின் அந்த எருமையின் எலும்புகளை சேகரித்து ஆய்வு செய்ததில், அந்த எருமை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025