மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

Default Image

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா-2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா -2020, அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா -2020, என 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது.

இந்த வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி,மத்திய அரசு வேளாண் மசோதாக்களை வாபஸ் பெற வேண்டும் என்று  தலைநகர் டெல்லியில் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைமையிலான விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.குறிப்பாக,பஞ்சாப்,ஹரியாணா உள்ளிட்ட மாநில விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு போராட்டத்தின் இலக்கை நோக்கி ஒரு வருடத்துக்கும் மேலாக முன்னெடுத்து சென்றனர்.

விவசாயிகளின் இந்த மாபெரும் போராட்டத்தினால் கடந்த ஆண்டு இறுதியில் மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.அதன்படி,மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது.

குறிப்பாக,விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், விவாசிகளின் விளைப்பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலைக்கு தனி மசோதா கொண்டு வருவது தொடர்பாக குழு அமைக்கப்படும் மற்றும் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது ஆசிஸ் மிஸ்ரா காரை ஏற்றியது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதிவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது.இதன்காரணமாக,ஒரு வருடத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர்.

இந்நிலையில்,வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 21 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக்,எஸ்.கே.எம். உறுப்பினர் அபிமன்யு கோஹர் கூறுகையில்:”மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து நீக்குதல்,விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.எனவே,மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 21 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் ” என்று  கூறினார்.

மேலும்,நாடு தழுவிய பிரச்சாரத்தின் அடுத்த கட்டத்தின் கீழ் விவசாயிகள் ‘எம்எஸ்பி உத்தரவாத வாரத்தை’ ஏப்ரல் 11 முதல் 17 வரை கடைப்பிடிப்பார்கள் என்று எஸ்கேஎம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்