உ.பி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக பின்னடைவு.! பகுஜன் சமாஜ்வாடி முன்னிலை.!
மெயின்பூரி மக்களவை தொகுதி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலும் சமாஜ்வாடி முன்னிலை பெற்று வருகிறது.
உத்திர பிரதச மாநிலத்தில் ராஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பின்னர் அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மெயின்பூரி மக்களவை தொகுதிக்கும், ராம்பூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கானின் தகுதி நீக்கம் ஆகிய காரணங்களுக்காக ராம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது.
இதில் மெயின்பூரி மக்களவை தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டிருந்தார். இன்று ஒட்டு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,
தொடர்ந்து , மெயின்பூரி மக்களவை தொகுதி மற்றும் ராம்பூர் சட்டமன்ற தொகுதி ஆகிய இரு இடைத்தேர்தல்களிலும் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி சமாஜ்வாடி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.