திருப்பதி கோவிலைப் பற்றிய செய்திகள் உண்மையல்ல : சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோவிலின் சொத்துகளை முறைகேடு செய்ததாக வெளியான செய்திகள் உண்மையல்ல என்றும், உள்நோக்கம் கொண்டவை என்று தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திருப்பதி சொத்துகளை முறைகேடு செய்ததாக தெலுங்குதேசம் தலைவர்கள் மீது முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறிய குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் காணிக்கையாக கொடுத்த வைரங்கள், தங்க நகைகள் தெலுங்கு தேசத்தின் தலையீடு காரணமாக மாயமாகிவிட்டதாக தீட்சிதர் புகார் தெரிவித்திருந்தார்.
தமது தவறுகளை மறைக்கவே அவர் பொய்ப்புகார் கூறுவதாக தெலுங்குதேச தலைவர்கள் ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவும் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.