ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கடந்த 4 நாளாக ஆளும் கட்சினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் முடங்கிய நிலையில் இன்று 5-வது நாள் காலையில் கூட்டத்தொடர் தொடங்கியதுமே, ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சியும், அதானி குழும விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால், இன்று நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 5-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், திங்கள் கிழமை காலை 11மணிக்கு இருக்கா அவைகளும் மீண்டும் கூடுகின்றன.
இந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 5 நாள்களாக எந்த விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…