கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது .
இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை உருவாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என முன்னிலை நிலவரங்கள் கூறுகின்றன.
4 மாநில வாக்கு எண்ணிக்கை.. 2 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக ..!
தெலுங்கானாவில் , தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர ராவின் , பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி மீண்டும் முன்னிலை பெற்று கேசிஆர் “ஹாட்ரிக்” அடித்து முதல்வராவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கே.சி.ஆர், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகாளான கஜ்வெல் (Gajwel ) மற்றும் காமரெட்டி (Kamareddy) ஆகிய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்ற நிலவரம் தான் தற்போது வெளியாகிறது.
மொத்தமும் 119 தொகுதிகளில் 53 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிரது. ஒரே ஒரு தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 10 ஆண்டுகால பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும்.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…