10 ஆண்டுகால கே.சி.ஆர் சாம்ராஜ்யம் சரிகிறதா.? தெலுங்கானாவில் முன்னேறும் காங்கிரஸ்.!

Telangana Election Results 2023 - Congress vs BRS

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில  சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது .

இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை உருவாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என முன்னிலை நிலவரங்கள் கூறுகின்றன.

4 மாநில வாக்கு எண்ணிக்கை.. 2 மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக ..!

தெலுங்கானாவில் , தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் சந்திரசேகர ராவின் , பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி மீண்டும் முன்னிலை பெற்று கேசிஆர் “ஹாட்ரிக்” அடித்து முதல்வராவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கே.சி.ஆர், தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகாளான கஜ்வெல் (Gajwel ) மற்றும் காமரெட்டி (Kamareddy) ஆகிய தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறார் என்ற நிலவரம் தான் தற்போது வெளியாகிறது.

மொத்தமும் 119 தொகுதிகளில் 53 தொகுதிகளில்  காங்கிரஸ் முன்னிலை பெற்று முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிரது. ஒரே ஒரு தொகுதியில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 10 ஆண்டுகால பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்