சேவலின் செம டெக்னிக்! வட்டத்திற்குள் சும்மா நின்று ரூ1.25 கோடி பரிசை தட்டி அசத்தல்!

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சேவல் சண்டையில்,நின்ற இடத்திலேயே இருந்து ரூ.1.25 கோடி பரிசுத் தொகையை சேவல் ஒன்று வென்றுள்ளது.

rooster fight

ஆந்திரா : பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழிக்கு ஏற்றபடி கடைசி வரை பொறுமையாக களத்திற்குள் நின்று சேவல் ஒன்று அதன் உரிமையாளருக்கு ரூ1.25 கோடியை பரிசாக பெற்றுக்கொடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேவல் சண்டை என்றாலே ஒரு வட்டத்திற்குள் சில சேவல்கள் நின்று கொண்டு சண்டைபோடுவதும் அதில் கடைசி வரை எந்த சேவல் களத்தில் நிற்கிறதோ அது தான் வெற்றியாளரும் ஆகும் என்பது நாம் அனைவர்க்கும் தெரியும். அப்படி ஆந்திராவில் நடத்தப்பட்ட சேவல் சண்டைபோட்டியின்போது அந்த சேவல் அசையாமல் ஒரே இடத்தில் நின்று பரிசுத்தொகையை வென்றதுதான் ஹாட் டாபிக் செய்தியாகவும் மாறியுள்ளது.

சேவல் சண்டையின்போட்டியின் போது மொத்தம் ஒரு வட்டத்திற்குள் 5 சேவல்கள் சண்டையிடவிடப்பட்டது. அப்போது முதலில் இரண்டு சேவல் சண்டைபோட்டு ஒரு சேவல் வட்டத்தை விட்டு வெளியே மயங்கி விழுந்தது. அந்த சேவலை வீழ்த்திய மற்றொரு சேவல் களத்தில் சண்டை போட ரெடியாக இருந்த மற்றோரு சேவலுடன் சண்டைபோட தொடங்கியது.  அதில் ஒரு சேவல் கொத்திய கொத்தில் போட்டியே வேண்டாம் என வட்டத்தை விட்டு வெளியே ஓடியது.

பின் வட்டத்திற்கு மொத்தம் 3 சேவல்கள் இருந்தது. அதில் ஒரு சேவல் சும்மாக நின்று கொண்டிருக்க மற்ற இரண்டு சேவல்களும் கடுமையாக சண்டையிட்டுக்கொண்டது.  சண்டைகளை பார்த்தாவது நின்று கொண்டு இருக்கும் அந்த பரிசு வென்ற சேவல் சண்டைக்கு வரும் என்று பார்த்தால் நின்ற இடத்திலே அப்படியே அசையாமல் நின்றது. அடுத்ததாக இரண்டு சேவல்களும் சண்டைபோட்டு மோதிக்கொண்டதில் இரண்டும் மயங்கி கீழே விழுந்தது. இதனால் சண்டைபோடாமல் சும்மாக நின்று கொண்டு இருந்த அந்த சேவல் போட்டியில் வெற்றியும் பெற்றது.

வெற்றிபெற்ற சேவலின் உரிமையாளர்  என்பவருக்கும் ரூ1.25 கோடி பரிசாகவும் வழங்கப்பட்டது. சண்டைக்குப்போகாமல் ஒரே இடத்தில் நின்று சேவல் பரிசை வென்றுள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்