இறுதிச்சடங்குக்கு சென்றவர்களில் 25 பேரை பலிவாங்கிய கல்லறையின் மேற்கூரை
உத்தரபிரதேசத்தில் காஜியாபாத்தின் முராத்நகர் பகுதியில் உள்ள கல்லறையில் மேற் கூரை இடிந்து விழுந்ததில் 25 பேர் பலி மற்றும் 20 பேர் காயம்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பழ வியாபாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க்க காஜியாபாத்தின் முராத்நகர் பகுதியில் உள்ள கல்லறைக்கு 50 க்கு மேற்பட்டோர் சென்றுள்ளனர்.இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது அங்கு நல்ல கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அங்குள்ள சிறிய மேற்குறையுடன் கூடிய நடைபாதை கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அப்பொழுதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது,ஏற்கனவே கனமழையால் மிகவும் வலுவிழந்த நிலையில் கட்டிடம் இருந்துள்ளது.இது நிலைகுலைந்து அங்கு கூடியிருந்தவர்களின் மேல் விழுந்துள்ளது. முதற்கட்ட தகவலின் படி இடிபாடுகளில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த சம்பவம் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.