பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன்…! எக்ஸ்ரேயில் கண்டுபிடித்த மருத்துவர்கள்…!

Default Image

பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறித்து விழுங்கிய வழிப்பறி கொள்ளையன். 

மத்திய பெங்களூருவின் எம்டி தெருவில், விஜய் என்ற நபர் ஹேமா என்ற பெண்ணின் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்பெண்  70 கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கச் சங்கிலியை அணிந்திருந்தார். அவர் இரவு 8:30 மணியளவில் மூன்று ஆண்களால் வழிமறிக்கப்பட்டார்.

அதில் விஜய் என்ற நபர் ஹேமாவின் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அவள் அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். அந்த நபரின் தாக்குதலுக்குப் பின் அவர் கீழே விழுந்தாலும், அவள் அவனை சங்கிலியை பறிக்கவிடவில்லை. பின் சிறிது நேரத்தில் விஜய் ஹேமாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை எடுத்து  கொண்டார்.

ஆனால் அந்த தெரு குறுகிய தெரு என்பதால் பொதுமக்கள் வந்து அவரை அடிப்பதற்கு முன்பதாக அந்த சங்கிலியை விஜய் விழுங்கிவிட்டார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கே.ஆர்.மார்க்கெட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, இன்ஸ்பெக்டர் பி.ஜி.குமாரசாமி அவரது காயங்களை பார்த்து மருத்துவமனையில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து விஜயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை சங்கிலியைப் பற்றி போலீசாருக்கு எதுவும் தெரியாது. மேலும் அப்பெண் கூட சங்கிலி தெருவில் எங்கோ ஓர் இடத்தில் விழுந்து விட்டது என்றுதான் நினைத்தார். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக அந்த சங்கிலி விஜய்யின் வயிற்றிலிருந்தது எக்ஸ்ரெயில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் அந்த பொருள் எலும்புத்துண்டு என்று போலீசார் மற்றும் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் போலீசார் அதை நம்பவில்லை. மேலும் சங்கிலியை வெளியேற்றுவதற்காக அவருக்கு எனிமா மற்றும் மலமிளக்கி  வாழைப்பழங்களை கொடுக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர். அதன்பின் சங்கிலி மலம் வழியாக வெளியே வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்